Skip to content
வாருங்கள், தமிழில் தியானம் பயில்வோம்!!
facebook
twitter
youtube
instagram
பிரம்மா குமாரிகள் | இராஜயோகம் | Brahma Kumaris Tamil
Call Support 9566004465
Email Support annanagar.che@bkivv.org
  • முகப்பு
  • தியானம்
    • வழிமுறை
    • அனுபவம்
    • காணொளி
  • பயிற்சி
    • ஆரம்ப பாடம்
    • மின்புத்தகங்கள்
  • அறிமுகம்
    • பிரம்மா குமாரிகள் வரலாறு
    • ஐ நா சபையில்
    • சேவை திட்டங்கள்
    • சேவை துறைகள்
  • தொடர்பு கொள்ள

இராஜயோக தியானம்

Home > portfolio > இராஜயோக தியானம்

இராஜயோக தியானம்

Posted on August 25, 2020September 5, 2020 by admin
0

உடல் மற்றும் மனதின் சக்தியை வளர்ப்பதற்கான ஒரு சிந்தனைப் பயிற்சியே தியானமாகும். இந்த நவீன உலகில், வாழ்க்கை அதிவேகமாக சென்றுக்கொண்டிருக்கிறது. நமது இயல்பான அமைதி, நமது உண்மையான சக்தியுடன் நம் தொடர்பை இழந்து கொண்டிருக்கிறோம். பல திசைகளில் நாம் தள்ளப்பட்டு இழுக்கப்படுவதை இந்நிலையில் அனுபவிக்க முடியும். இந்த கட்டத்தில்தான் நாம் மன அழுத்தத்தையும், சிக்கிக்கொண்ட ஒரு உணர்வையும் அனுபவிக்க ஆரம்பிக்கிறோம். படிப்படியாக, காலப்போக்கில், இந்த உணர்வு மன உளைச்சல் மற்றும் நோய்க்கு வழிவகுக்கிறது. ஏனெனில் நமது மன ஆரோக்கியம், உளநல ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் சமநிலையிலிருந்து மாறுபடுகிறது. நாம் யார் என்று உணர்ந்து, எல்லோருக்கும் தந்தையான இறைவன் யார் என்று தெரிந்து அவரை மனதால் அன்போடு நினைவு செய்வது தான் இராஜயோக தியனமாகும். இது சாதி, சமய, இனம், மொழி, ஏழை-பணக்காரர், ஆண்-பெண், படித்தவர்-படிக்காதவர் என எந்த வேறுபாடுமின்றி அனைவரும் கற்க தகுந்த ஒரு எளிமையான தியான முறையாகும். இதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியாக வாழும் கலையைக் கற்றுக் கொள்ள முடியும்.

இராஜயோகப் பயிற்சியின் நன்மைகள்

கோபம், வெறுப்பு, மனச்சோர்வு, மன இறுக்கம் போன்றவைகளிலிருந்து விடுபட்டு மன அமைதி பெற இந்த தியானம் உதவுகிறது. தேவையற்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து வெற்றி அடைய மனோ பலமும், தன்னம்பிக்கையும் இந்த தியானத்தின் மூலம் அடைய முடியும். கவலைகள் மறந்து ஆனந்தக் கடலில் மூழ்க இயலும். எண்ணம், சொல், செயலின் ஒருமைப்பாட்டின் காரணமாக காரியங்களில் செயல் திறனை அதிகரிக்க முடியும்.

மேலும், ஞாபக சக்தி, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், பரந்த மனப்பான்மை, மன ஒருமைப்பாடு, மன அடக்கம் ஆகியவற்றை இந்த யோகத்தின் மூலம் எளிதில் அடையலாம்.  முறையான இராஜயோக பயிற்சி மூலம் ஒருவரிடத்தில் நேர்மை, பணிவு, அமைதி, பொறுமை, சுதந்திரம், மகிழ்ச்சி, எளிமை, ஒற்றுமை, ஒத்துழைப்பு, அன்பு, மரியாதை, பொறுப்பு, பயமின்மை போன்ற நற்பண்புகள் வளர்கின்றன.

மேலும் அறிந்துகொள்ள...

உலகளாவிய பிரம்மா குமாரிகள் இயக்கமானது கல்வி மற்றும் ராஜயோக தியானம்  ஆகியவற்றை 145 நாடுகளில் 9500 மையங்களின் மூலமாக கற்ப்பித்து வருகிறது. மேலும் இந்த நிறுவனமானது உலக நாடுகளின் சபையில் அரசு சாரா நிறுவனமாகவும் UNESCO. UNICEF நிறுவனங்களின் கருத்துரை வழங்கும் நிறுவனமாகவும் இருந்து வருகிறது.
Recent News
இணையதளம் வழியாக தியான வகுப்புகள்
 நமது அனைத்து தியான வகுப்புகள் இணையதளம் வழியாக ஒளிபரப்ப படுகிறது. நமது அனைத்து கிளை  நிலையங்களும் தற்போது கொரோனா காரணத்தினால் இயங்குவதில்லை
தாதி பிரகாஷ்மணி ஜி அவர்களின் 13வது நினைவு தினம்
தாதி அவர்கள் இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தார் 
முகவரி
Q -96, 3 வது அவென்யூ மெயின் ரோடு, எதிர் 14 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அண்ணா நகர், சென்னை.
7200027999
044 2626 6765
annanagar.che@bkivv.org
© 2026 பிரம்மா குமாரிகள் | இராஜயோகம் | Brahma Kumaris Tamil | WordPress Theme: Enlighten