உலகம் முழுவதிலும் பல இடங்களில் பிரம்மா குமாரிகளின் ரெட்ரீட் சென்டர்கள் உள்ளன. அமைதி நிறைந்த இயற்கையான சூழ்நிலையில் ஒரு நாள் அல்லது வார இறுதியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பல்வேறு விதமான தியான மற்றும் பயிற்சி வகுப்புகள் இங்கு நடைபெறுகிறது. வழக்கமான மன இறுக்கத்தில் இருந்து விடுபட்டு ஓய்வாக புத்துணர்ச்சி பெறும் விதமாக இந்த நிகழ்சிகள் அமைகின்றன.
